• முகப்பு
  • இலங்கை
  • கோழி இறைச்சி, மீன், முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கோழி இறைச்சி, மீன், முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கௌசல்யா

UPDATED: May 30, 2023, 6:24:31 AM

கோழி இறைச்சி, மீன், முட்டை பிரியர்களுக்கு அதிர

சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும் பாறை 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சால 400 ரூபாவிற்கும் லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுச் சந்தையிலும் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. கெலவல்ல கிலோ 2800 முதல் 3200 ரூபாய் வரையிலும், பலயா கிலோ 2000 ரூபாய், பாறை கிலோ 2400 ரூபாய், தலபத் கிலோ 3200 மற்றும் 3800 ரூபாய்க்கும், சால ஒரு கிலோ 650 ரூபாய்க்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended