• முகப்பு
  • aanmegam
  • ஸ்ரீமுஷ்ணம் புனித அன்னை ஆலயத்தில் பங்கு பெருவிழா.

ஸ்ரீமுஷ்ணம் புனித அன்னை ஆலயத்தில் பங்கு பெருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீ புத்தூர் கிராமத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் புனித அன்னை ஆலயத்திற்கு தேர்பவனி நடந்து வருவது வழக்கம் , இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டு காலமாக ஒவ்வொரு கோவில்களும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கடந்த புதன்கிழமை பங்குத்தந்தை இருதய சாமி மரியதாஸ் மற்றும் கிராம பொதுமக்கள் நாட்டாமைகள் கொடியேற்றி அன்னையை வழிபட்டனர். வெள்ளிக்கிழமை திருப்பலி நடைபெற்றது , நேற்று இரவு சுமார் 9 மணியளவில் பங்குத்தந்தை இருதய சாமி பூஜை நடத்தி பொதுமக்களுக்கு ஆசீர்வதித்தார் . இதனைத்தொடர்ந்து 10 மணி அளவில் சிறுவர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது ,11 மணி அளவில் அன்னை தேரில் அமரவைத்து நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended