• முகப்பு
  • political
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கட்சியில் இருந்து விலகிய காரணம்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கட்சியில் இருந்து விலகிய காரணம்..

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவரும், இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில்சிபல் சமீபமாகவே காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும், சமாஜவாதி கட்சி ஆதரவுடன், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத்தாக்கலின் போது சமாஜவாதி கட்சித்தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் அக்கட்சியின் எம். பி. ராம் கோபால்யாதவ் ஆகியோர் உடனிருந்தனர். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended