மணல் லாரிகள் பறிமுதல்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர்மாவட்டம், வெங்கல்அடுத்த மெய்யூரில் தனியார்நிலத்தில் சவுடுமண் எடுக்கமாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில் அனுமதிக்கப் பட்ட இடத்தை விட்டு விட்டு மாற்றுஇடத்தில் மணல்கொள்ளை நடப்பதாகவும், அதிக ஆழம் மணல் அள்ளப் படுவதாகவும் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளுக்கும் வெங்கல் காவல்த்துறையினருக்கு அப்பகுதி மக்கள்தொடர்ந்து புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் ஊத்துக் கோட்டை டிஎஸ்பி சாரதிதலைமையில் கொண்ட தனிப் படை போலீசார் சம்சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அனுமதிக்கப் பட்ட இடத்தை விட்டு விட்டு மாற்று இடத்தில் மணல்கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதை அடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட பதினோரு லாரிகளையும், ஐந்து ஜேசிபி இயந்திரங்களையும் காவல்த்துறையினர் பறி முதல் செய்து லாரிகளை வெங்கல் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. மேலும் லாரிஓட்டுlர்கள் இது குறித்து கூறுகையில், நாங்கள்முறையாக பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு பிறகு மணலை ஏற்றிக்கொண்டு வந்தோம் வரும்வழியி போலீசார் திடீரென எங்கள்வாகனங்களை வழி மறித்து ஆவணங்களை காட்டும்படிகேட்டனர். சரியான ஆவணங்களையும் ரசீதைகாட்டியும் எங்கள் மீது பொய்வழக்கு பதிவுசெய்து எங்களை அலைக் கழிகக வைக்கின்றனர். இது போன்று போலீசார் பொய்வழக்கு திரும்ப பெறாவிட்டால் லாரி சங்கங்களை திரட்டிபெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அவர்கள் கூறினர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended