• முகப்பு
  • ஆன்மீகம்
  • சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருகம்பம் திருவிழா.

சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருகம்பம் திருவிழா.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 12, 2023, 6:52:27 AM

இந்தியாவிலேயே மிக உயரமான 20 அடி உயரத்தில் திருகம்பம் நடப்பட்டது.பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டு வருகின்றனர் .

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு பத்ரகாளி அம்மன், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு மாகாளியம்மன் ஆகிய ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் திருக்கம்பம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து 11.5.2023 இரவு அருள்மிகு மாரியம்மன் கோவில் முன்பு திருக்கம்பம் நடுவிழா நடைபெற்றது.

முன்னதாக கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்ட அரச மரத்தால் இந்தியாவிலேயே மிக உயரமான 20 அடி உயரத்தில் திருகம்பம் வடிவமைக்கப்பட்டு ஆலையத்தில் இருந்து பவானி ஆற்றிற்கு எடுத்துச் சென்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து திருக்கம்பம் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு ஆலையத்திற்கு திருகம்பம் எடுத்து வந்து கம்பத்திற்கு மஞ்சள் பூசி மலர்கள் சுற்றி ஆலயம் முன்பு திருக்கம்பம் நடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை திருகம்பத்திற்கு பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டு வருகின்றனர் 

இந்த நிகழ்ச்சியில் வரதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த கம்பம் நடுவிழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆன திருகம்பத்தை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர்.

ஆலயத்தின் முக்கிய விழாவான அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 25ஆம் தேதி காலை 8 மணி அளவில் குண்டம் திருவிழா நடைபெறுகிறது அன்று இரவு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended