• முகப்பு
  • குற்றம்
  • கடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் புரோக்கர் சிவா ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது..

கடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் மற்றும் புரோக்கர் சிவா ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது..

குமரவேல்

UPDATED: May 31, 2023, 10:34:11 AM

கடலூர் கேப்பர் மலை அருகே மாவட்ட தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர்,

சென்னையிலிருந்து செப்டிக் டேங்க் சுத்தம் செய்யக்கூடிய வாகனத்தை வாங்கி கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர்மாற்றம் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக புரோக்கர் சிவா மூலம் மேற்படி அலுவலகத்தை அனுகியுள்ளார். 

அப்போது புரோக்கர் மேற்படி பணிக்காக 5500கேட்டதாக தெரிகிறது.இதனால் மனமுடைந்த செல்வராஜ் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலர்கள் மாறுவேடத்தில் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்துள்ளனர்.

அப்போது வாகன உரிமையாளர் செல்வராஜ் புரோக்கர் சிவாவிடம் 5500ரூபாய் கொடுத்து உள்ளார்.

மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் புரோக்கர் சிவா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் ஆகியோரை கைதுசெய்தும் அலுவலகத்தை சோதனையிட்டனர்.

அப்போது கணக்கில் வராத 2லட்சம் ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended