• முகப்பு
  • world
  • இலங்கையில் அதிகார மையமாக இருந்த அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டது 21வது சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் !!!

இலங்கையில் அதிகார மையமாக இருந்த அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டது 21வது சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இலங்கையில் மின்வெட்டு , குடிநீர் பற்றாக்குறை , பெட்ரோல் , டீசல் , அத்தியாவசிய பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை விண்ணை முட்டியது. இதனால் மக்கள் போராட்டம் வெடித்தது இந்நிலையில்தான் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் இலங்கையில் அதிபரின் அதிகாரம் அதிகளவில் இருப்பதால் அவருடைய அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் பாராளுமன்றத்திற்கு அதிகளவில் அதிகாரத்தை கொடுக்கும் அரசியல் சாசனம் 21-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended