ராமேஸ்வரம், நாகை மீனவர்கள் 32 பேர் விடுவிப்பு 4 பேர் சிறையில் அடைப்பு இலங்கை கோர்ட்டு உத்தரவு.

கார்மேகம்

UPDATED: Mar 28, 2024, 6:39:37 AM

எல்லை தாண்டி மீன் பிடித்தாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் நாகை மீனவர்கள் 32 பேரை விடுவித்தும் 4 பேரை சிறையில் அடைத்தும் இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது 

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து  கடந்த 15 ந் தேதி அன்று ஒரு விசைப் படகில் மீன் பிடிக்க சென்ற 15 நாகை மீனவர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 16 ந் தேதி 2 விசைப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 21 மீனவர்களும்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இந்த 36 மீனவர்களும் நேற்று  ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் அப்போது நீதிபதி அந்தோணி பிள்ளை சூட்சன் விசாரித்து எல்லை தாண்டி வந்ததாக மேற்கண்ட படகுகளின் டிரைவர்கள் 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனையும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 வது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள அந்தோணி என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப் படகு இலங்கை அரசுடமை ஆக்கப் படுகிறது என உத்தரவிட்டுள்ளார் எனவே படகு டிரைவர்கள் உள்பட 4 மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர் மீதமுள்ள 32 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

அடுத்தடுத்து படகு டிரைவர்கள் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டு வரும் நடவடிக்கையானது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகின்றது.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

VIDEOS

RELATED NEWS

Recommended