• முகப்பு
  • pondichery
  • அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்படும் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்.

அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்படும் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 6, 2023, 12:45:33 PM

மக்களுக்கு பயன் அளிக்காத மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை கண்டித்தும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் அதானி குழுமத்திற்கும் ஆதரவாக செயல்படும் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என்பன போன்ற வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் காந்திவீதி ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறும் போது.. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விமான நிலையம் ,மின்துறை, துறைமுகம், சோலார், நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு தனியாருக்கு தாரை பார்க்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கார்பரேட் நிறுவனங்களும் அதானி போன்ற குழுமத்தினரும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக உள்ளனர் எனவே நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமான அதானி குடும்பத்திற்கும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ஆதரவாக செயல்படும் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தனது பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்திய நாராயணசாமி இது சம்பந்தமாக பாராளுமன்ற நிலைக்குழு இல்லை என்றால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended