• முகப்பு
  • tamilnadu
  • காவல் . (தெய்வங்கள்) தான் மக்களை காப்பாத்தனும்.

காவல் . (தெய்வங்கள்) தான் மக்களை காப்பாத்தனும்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சில நாட்களாக லாக்கப் மரணம் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது பல விவாதம் நடந்து கொண்டிருக்கிறது மரணமடைந்தவரின் பின்புலன் நோக்கி பார்த்தால் பல குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆக தான் இருக்கிறார்கள். இவர்களால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குற்றவாளிகளை விசாரணைக்கு அல்லது கைது செய்யும்பொழுது முறையான காவல்துறையின் அணுகுமுறை பயன்படுத்துமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அதே சமயத்தில்... இது முதன்முதலாக குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது, தொழிலாக எடுத்து செய்பவர்களுக்கு இந்த அறிவுரை இருக்கக்கூடாது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் காவல்துறை கண்டால் பயந்து ஓடுவார்கள் ஏன் என்றால் முதலில் காவல்துறையில் பிடிபட்டால் அடிப்பார்கள் பின்பு கைது செய்வார்கள் அந்த பயத்தில் ஓடுவார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் பார்த்தால் குற்றவாளிகளும் ஓடவும் மாட்டார்கள் ஒளியவும் மாட்டார்கள் ஏனென்றால் காவல்துறை, அவர்களை கைது செய்தால் அடிக்க மாட்டார்கள் அவரைக் கைது செய்து பின்னர் அவரது குற்றத்தை ஒப்புக் கொண்டால் அல்லது நிரூபிக்கப்பட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 15 நாள் அல்லது மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ சிறையில் அடைப்பார்கள். பின் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து அவனுடைய பணியை மீண்டும் தொடர்வான். வரும் நாட்களில் இதுவே குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வழி வகுத்து விடுமோ என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். கொலை , கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் , வழிப்பறி, திருட்டு போன்ற இன்னும் பல குற்ற வழக்குகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு , குற்ற வழக்குகளை தொழிலாக செய்பவர்களுக்கு தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் அவர்களுக்கு மிகக் கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே குற்றங்கள் குறையும். பெரும்பான்மையான மக்கள் மனக்குமுறலை நம்மிடம் பகிர்ந்தனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended