• முகப்பு
  • pondichery
  • கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாக காவல் நிலையங்கள் மாறிவிட்டது.

கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடமாக காவல் நிலையங்கள் மாறிவிட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாபுவின் மகன் மாணவர் விஷ்ணுகுமார்(எ)பாலாஜி (17). இவர் பைக்கில் பத்துக்கண்ணு சாலையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து போலீஸார், விஷ்ணுகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, வாகன தீர்ப்பாயம் நீதிமன்றம் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு விஷ்ணுகுமாரின் வீட்டுக்கு சம்மன் அனுப்பியது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் விஷ்ணுகுமார் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு விஷ்ணுகுமார் வெளியிட்ட விடியோவில், தனது இறப்புக்கு காரணம் போக்குவரத்து காவல்துறையினரும், இழப்பீடு கேட்ட பெண்ணும், அரசுப் பேருந்தில் பணிபுரியும் அவரது மகள் ஆகியோர்தான் காரணம் என்றும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் இறந்த விஷ்ணுகுமாரின் உறவினர்கள், நண்பர்கள், கூடப்பாக்கம் பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பத்துக்கண்ணு சந்திப்பில் திரண்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர். மேலும், இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வலியுறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் போலீஸார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.  இதனிடையே முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏ வைத்தியநாதன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர் விஷ்ணுகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறை நிர்வாகம் புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக சம்பித்துள்ளது. கட்ட பஞ்சாயத்து நடக்கும் இடமாக காவல் நிலையங்கள் மாறிவிட்டது என்றார். முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் காவல்துறை சீரழிந்துள்ளது. எனவே உதவி ஆய்வாளர் பாலாஜி உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் மீது கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால் தான் இந்த வழக்குக்கு தீர்வு கிடைக்கும். டிஜிபி காவல்துறையை சீர்செய்ய வேண்டும். எலி பேஸ்ட்டை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டும் என்றார். பேட்டி: நாராயணசாமி, முன்னாள் முதல்வர் புதுச்சேரி. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended