• முகப்பு
  • crime
  • பிரபல திரைப்பட நடிகை வழக்கில் திடீர் திருப்பம் கொலையா என போலீஸ் விசாரணை ?

பிரபல திரைப்பட நடிகை வழக்கில் திடீர் திருப்பம் கொலையா என போலீஸ் விசாரணை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மலையாளத்திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் சஹானா. மாடலிங் நடிகையாகவும் வெள்ளித் திரையில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இரண்டுபடங்களில் நடித்துள்ள இவர் தமிழில் லாக்டவுன் என்றபெயரில் உருவாக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் 22 வயதான சஹானா கடந்த வியாழக் கிழமை தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அன்று இரவே கோழிக் கோட்டில் உள்ள அவரதுவீட்டில் சடலமாக கிடந்தச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தற்கொலை என சொல்லப்பட்டு வரும்நிலையில் சஹானாவின் பெற்றோர் இது தற்கொலை அல்ல திட்ட மிட்ட கொலை. ஏற்கனவே அவருடையகணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். அவளுக்கு சரியான உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்ததாக கூறி உள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணைமேற்கொண்டு இது கொலையா? தற்கொலையா? என்பதை கண்டறியவேண்டும் என தெரிவித்து உள்ளனர். சஹானாவுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் மட்டுமே ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended