• முகப்பு
  • pondichery
  • புதுச்சேரியில் 1.09 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மூன்று நைஜீரியர்களை கைது செய்த போலீசார்

புதுச்சேரியில் 1.09 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மூன்று நைஜீரியர்களை கைது செய்த போலீசார்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லெனின்.இவரது மனைவி ஜனனி.கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார். அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு சிறுக சிறுக ஜனனியிடம் ரூ.14 பெற்றனர். ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை.இதனால் சந்தேகமடைந்த ஜனனி இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த மோசடியில் ஈடுபட்ட டில்லியை சேர்ந்த விஜய்குமார் குப்தாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.79 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.    இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி சேர்ந்த அன்மோல் ஜெயின் என்பவரிடம் கனடாவிலிருந்து மொபைல்போன் தொடர்பு கொண்ட நபர், அமெரிக்காவில் வாரிசு இல்லாத செல்வந்தர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது வங்கி கணக்கில் 78 கோடி ரூபாய் உள்ளது. அதனை எடுக்க கூட்டாளியாக சேர்த்து எடுக்க ஆன்–லைனில் பல்வேறு வங்கி கணக்கு மூலம் ரூ.41 லட்சம் பெற்று மோசடி செய்தார். இந்த வழக்கில் மணிப்பூரை சேர்ந்த ரோனால் சிங் என்பவரை டில்லியில் கைது செய்தனர்.  கடந்த 2021 ம் ஆண்டு புதுச்சேரி சேர்ந்த சுனைனா நாரக்கிடம் கல்யாணம் செய்வதாக ஆன்லைன் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசிய, கனடாவை சேர்ந்த அந்த மர்ம நபர் நான் டாக்டர் எனவும் சொந்தமாக மருத்துவமனை கட்டுவதற்காக பணம் தேவைபடுவதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.54 லட்சம் மோசடி செய்தார். பின்னர் அந்த நபர்குறித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் தெரியவந்தது , டில்லியில் இருந்த இவரையும் கைது செய்தனர்.இந்த இரண்டு வழக்குகளில் பணம் பறிமுதல் செய்யவில்லை. இந்த மூன்று மோசடி வழக்குகளில் 1.09 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய ஆதரமாக இரண்டு ரவுட்டர்கள், 11 மொபைல்போன்கள், 11 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆன்–லைனில் பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே முன்பின் தெரியாத இ–மெயில் முகவரி, செயலிகளை நம்பி பணத்தினை அனுப்ப கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பேட்டி: சந்தோஷ்குமார், முதுநிலை காவல் கண்காணிப்பாளர். கைது செய்யப்பட்ட நைஜீரியர் உள்ளிட்ட 3 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

RELATED NEWS

Recommended