• முகப்பு
  • world
  • இலங்கை பாஸ்போர்ட் பெற மக்கள் திண்டாட்டம்.

இலங்கை பாஸ்போர்ட் பெற மக்கள் திண்டாட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடும்பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கையிலிருந்து வெளியேற மக்கள்முயன்று வருவதன் விளைவாக, பாஸ்போர்ட்விநியோகிக்கும் அலுவலகத்தில் மக்கள் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 91,331 பாஸ் போர்ட்டுகள் விநியோகிக்கப் பட்டன. அதே, இந்தாண்டுமுதல் ஐந்துமாதங்களில் மட்டும் 2,88,645 பாஸ் போர்ட்டுகள் விநியோகிக்கப் பட்டுள்ளனர். புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு ஒரு நாளில்மட்டும் குறைந்த பட்சம் 3,000 விண்ணப்பங்கள் வரும் நிலையில், பாஸ் போர்ட் பெற அவர்கள் மூன்றுமுதல் நான்குநாட்கள் வரை மண்டல அலுவலகத்திலேயே காத்து இருக்கிறார்கள். விண்ணப்பங்கள் குவிவதால், பாஸ்போர்ட் அலுவலகஊழியர்கள் கூடுதல் நேரம்வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டு பெறமூன்று நாட்களாகக் காத்திருப்பதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலையில் இருந்துவந்து வரிசையில் மூன்றுநாட்களாக காத்திருக்கும் 50 வயது பெண்மணிஒருவர், குவைத்தில் வீட்டு வேலை செய்வதற்காக, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்ததாகக்கூறுகிறார். இவரைப்போல, தொழிலாளர்கள், விவசாயிகள் என பலதரப்பினரும் இலங்கையை விட்டு வெளியேற, இரவுமுழுவதும் அங்கேயே காத்து இருக்கின்றனர். இலங்கையில் பணவீக்கம் 33% ஆக உயர்ந்து விட்ட நிலையில், விலைவாசி உயர்வும், குடும்பத்தைப்பட்டினி போட முடியாத சூழலுமேநாட்டை விட்டு வெளியேறக்காரணம் என்கிறார்கள் இவர்கள். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended