• முகப்பு
  • குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாத மக்கள்.

குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாத மக்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் பகுதியில், ஏராளமான குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் குரங்குகளை மிரட்டும் பொதுமக்களை குரங்குகள் கடித்து வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் செல்வகுமாரி உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் காதர்பாஷாவிடம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரம் பகுதியில் வனத்துறையின் சார்பில் கூண்டுகள் அமைக்கப்பட்டு அதில் தின்பண்டங்கள் கொட்டப்பட்டு அவற்றை எடுக்க குரங்குகள் வரும்பொழுது அதனை மூடி கூண்டுகளில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இன்று ஒரே நாளில் சுமார் 75க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து அவற்றை வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டு காப்புக் காடுகளில் வனத்துறையினர் விட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Kallakurichi news,Kallakurichi tamil news,latest kallakurichi tamil news updates,monkeys,forest,forest department

VIDEOS

RELATED NEWS

Recommended