நெல்லிக்குப்பம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அச்சம்.

குமரவேல்

UPDATED: May 23, 2023, 9:42:02 AM

நெல்லிக்குப்பம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய் ஓட்டை விழுந்ததை அடுத்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அதனையடுத்து 9வது வார்டு கவுன்சிலர் சத்யா குடிநீரில் கழிவுநீர் கலப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்திருந்தார். மேலும் கவிதை நடைமுறையில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக நமது செய்திகளில் வெளிவந்து இணையத்தில் வைரலானது.ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சி நிர்வாகம் இதுவரை கழிவுநீர் கலக்கப்படும் இடத்தை கண்டுபிடிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் சத்யா தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்களிடம் மேற்படி கழிவுநீர் கலப்பு குறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து,

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆனைக்கிணங்க நெல்லிக்குப்பம் 9வது வார்டு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 

இதனால் ராமு தெரு, கைலாசநாதர் கோவில் தெரு,பங்களா தெரு உள்ளிட்ட மக்கள் பயன்பெற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended