தொலைபேசி மூலம் கட்டணம் மோசடி!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜே-7 வேளச்சேரி பகுதியில், தொலைபேச மூலம் தொடர்புகொண்டு "Quick support App"-ஐ பதிவிறக்கம் செய்து மின்கட்டணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்த ஹரிகிருஷ்ணன் விக்டோரி என்பவரது HDFC வங்கி கணக்கிலிருந்து 4,99,999/- ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜே-7 வேளச்சேரி காவல் நிலைய போலீஸார் மற்றும் புனித தோமையார்மலை சைபர் கிரைம் போலீஸார் வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து புகார்தாரரின் பணத்தை திரும்பப்பெற்று கொடுத்துள்ளனர். கடந்த 28.05.2022 அன்று ஹரிகிருஷ்ணன் விக்டோரி என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர், நீங்கள் இன்னும் மின்கட்டணம் (EB Bill) செலுத்தவில்லை என்றும், செலுத்தாமல் இருந்தால் மின்இணைப்பை துண்டித்துவிடுவோம் என்றும், தங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள "Quick support App"-ஐ பதிவிறக்கம் செய்து மின்கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். ஹரிகிருஷ்ணன் விக்டோரி என்பவரும் மேற்கூறியவாறு செய்ததும் அவரது HDFC வங்கி கணக்கிலிருந்து 4,99,999/- ரூபாய் பணம் எடுக்கப்பட்டுவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஹரிகிருஷ்ணன் விக்டோரி என்பவர் கடந்த 29.05.2022 அன்று புகார் அளித்ததன் பேரில் ஜே-7 வேளச்சேரி காவல் நிலைய போலீஸார் CSR பதிவு செய்து, புனித தோமையார்மலை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா மற்றும் அடையாறு சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து ஹரிகிருஷ்ணன் விக்டோரி என்பவருக்கு அவரது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூபாய் 4,99,999/- பணத்தை திரும்பப்பெற்று கொடுத்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended