முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நிற்காத பேருந்துகளால் பயணிகள் அவதி!

மகேந்திரன்

UPDATED: May 8, 2023, 3:13:29 PM

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி முக்கொம்பு சுற்றுலா தலத்தில், அரசு, தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

திருச்சி-கரூர் மாவட்ட எல்லையில் காவிரியாற்றின் குறுக்கே, கொள்ளிடம் ஆறு பிரியும் இடத்தில் முக்கொம்பு சுற்றுலா தலம் உள்ளது. 

காவிரியாற்றின் நடுப்பகுதியில்அமைக்கப்பட்டுள்ள, முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு, பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கரூர், குளித்தலை வழியாக திருச்சி செல்லும் பேருந்து முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டும்.

ஆனால் அரசு, தனியார் பேருந்துகள் முக்கொம்பு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், திருச்சி சத்திரம் பேருந்து சென்று, அங்கிருந்து நகர பேருந்து மூலம், முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு செல்ல வேண்டும்.

இல்லையேல், ஆட்டோ, கார் மூலம் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டும்.

பேருந்துகளை நிறுத்தாததால், 25 கிலோ மீட்டர் துாரம் சுற்றுலா பயணிகள் தொட்டியம், முசிறி வழியாக சென்று, திருச்சிமாவட்டம் வாத்தலை பேருந்து நிறுத்ததில் இறங்கி, எதிரே உள்ள முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு எளிதாக செல்கின்றனர்.

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், முக்கொம்பு சுற்றுலா தளம், பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்த, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துதுறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

VIDEOS

RELATED NEWS

Recommended