பகுதி நேர ஆசிரியர்கள் செய்தி குறிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

*தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க செய்திக் குறிப்பு.* தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று *29-05-2022* மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாநில தலைவர் *கு.சேசுராஜா அவர்கள்* தலைமை வகித்தார். மாநில செயலாளர் *கு.நவீன் அவர்கள்* முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் *சுரேஸ் அவர்கள்* வரவேற்புரை வழங்கினார். நிதிக் காப்பாளர் *ஆர்.ஆனந்தக்குமார்* அவர்கள் நேற்றைய தேதி வரையிலான வரவு செலவு அறிக்கையினை தாக்கல் செய்தார். கூட்டத்திற்கு பெரும்பாண்மை மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கெடுத்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். திருச்சி மாவட்ட செயலாளர் *சசி அவர்கள்* நன்றியுரை வழங்கினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. @# *பகுதிநேர ஆசிரியர்களின் 10 ஆண்டு கனவான, ஒற்றை கோரிக்கையான, ஒரே தீர்வான பணிநிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கையை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது திமுகழகம் தனது தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர படுத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்து இருக்கிறது அதன் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்களை பத்தாண்டு கால பணியினை கருத்திற்கொண்டு உடனடியாக பணி நிரந்தரம் படுத்தப்பட வேண்டும் என்று தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற எழுச்சிமிகு கவனயீர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மதிப்பிற்குரிய முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் அவர்களும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும் விரைவில் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர அறிவிப்பு சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் கல்வி மானிய கோரிக்கை அன்று வரும் என்ற நம்பிக்கையில் இருந்தும் வராத காரணத்தினால் மீண்டும் மே 5 முதல் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போதும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களும் நிதி நிலைமையை காரணம் காட்டி பணி நிரந்தரம் காலதாமதமாகும் என்கின்ற காரணத்தினால் தற்காலிக தீர்வாக ஊதிய உயர்வு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள் அந்த ஊதிய உயர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி பதிவேடு துவங்குதல் மற்றும் பிஎஃப்,, இஎஸ்ஐ பிடித்தம் செய்தல் கல்வியாண்டில் அனைத்து வேலை நாட்களும் முழுநேர பணி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம் இக்கோரிக்கைகளை வருகின்ற வரும் ஜூன் 13 பள்ளி திறப்பதற்கு முன்பதாகவே அறிவிப்பாக வெளியிட வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது* @# *கடந்த போராட்டத்தின் பேச்சுவார்த்தையில் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்கள் ஏற்றுக்கொண்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி ஓய்வு காலம் 58லிருந்து 60 ஆக உயர்த்துவதற்கும் அதிக தொலைவில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதாக ஏற்றுக்கொண்ட கோரிக்கையினை வரும் ஜூன் 13 பள்ளி திறப்பதற்கு முன்பதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது* @# *தற்காலிக தீர்வாக ஊதிய உயர்வு ஏற்றுக்கொண்டாலும் பகுதிநேர ஆசிரியர்களின் ஒரே இலக்கு பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வென்றெடுப்பது மட்டுமே பணிநிரந்தரம் என்ற இலக்கை அடையும் வரை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் உயிர்மூச்சு கொள்கையாக கடைபிடித்து வரும் காலங்களில் தொய்வின்றி தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது* @# *அனைத்து மாவட்டங்களிலும் நமது இன்றைய நிலை நாளைய நிலை குறித்து மாவட்ட கூட்டங்கள் நடத்தி விளக்கிக் கூறி, கட்டமைப்பை பலப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது* ஒப்பம் கு. சேசுராஜா மாநிலத் தலைவர் கு. நவீன் மாநிலச் செயலாளர் செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

RELATED NEWS

Recommended