• முகப்பு
  • tamilnadu
  • மரண பயத்தில் பகுதி நேர ஆசிரியர்கள். வச்சி செய்யும் திமுக அரசு.

மரண பயத்தில் பகுதி நேர ஆசிரியர்கள். வச்சி செய்யும் திமுக அரசு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 11, 2023, 8:43:15 AM

மரண பயத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆளும் தரப்பினர் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறை வேற்றாமல் படிப்படியாக மற்றும் புடிப்புடியாக பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என ரெக்கார்டை திருப்பி போட்டதால், பகுதி நேர ஆசிரியர்கள் திமுக அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டனர். திமுகவால் பணி நிரந்தரம் கிடைக்க வாய்ப்பில்லை பகுதி நேர ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டார்கள் ஏன் தான் வாக்களித்தோமோ என புலம்பி வருகின்றனர். அதற்கேற்ப நடந்து முடிந்த கலந்தாய்வு சொதப்பல்களும் அதை உறுதி செய்வது போல உள்ளது. முதல்வரோ குறவர் வீட்டில் இட்லி சாப்பிட்டார் ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து பச்சை தண்ணீர் குடிக்க வில்லை. எனவே பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்க்கை ஆட்டம் குளோஸ் என முடிவு செய்து விட்டனர். எரியற வீட்டில் புடிங்கிய வரை லாபம் என்பது போல் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வச்சி செய்யும் திமுக அரசை பாராட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ய வசூல் வேட்டை நடப்பதாக விசாரணை போய் கொண்டு இருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ...... எல்லாருமே திருடங்கதான்...... என்ற இரு திரைப் பாடல்களும் பகுதி நேர ஆசிரியர்கள் காதுகளில் ரீங்கரம் இடுகிறதாம். இருப்பினும் ஓவியத் துறை முடித்த கையோடு உடனடியாக மற்ற துறைகளுக்கான கலந்தாய்வாவது உடனே நடத்த வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் விரும்புகின்றனர். நடுநடுவே சிலர் பொய்யான‌ புரளிகளை பரப்பிவிடுவதால் பகுதி நேர ஆசிரியர்கள் மரண பயத்தில் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இதனிடையே பணி புரியும் இடத்தின் டார்ச்சர் வேறு. பகுதி நேர ஆசிரியர்களை பஞ்சம் பிழைக்க வந்த வட நாட்டவர்களைப்போல நினைத்து அடிமைகள் சிக்கிவிட்டார்கள் என்று முழு நேரமாக பகுதி நேர ஆசிரியர்கள் சொந்த செலவில் வெளிவேலை செய்ய சொல்வது. இதனிடையே விரக்தியில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் Work Education க்கு விரையில் transfer கலந்தாய்வு நடத்த வேண்டும். ஒரு பள்ளிக்கு 2 அல்லது 3 துறை ஆசிரியர்களை போட வலியுறத்த வேண்டும். (Example Computer and tailoring teacher work in same school) or (music and tailoring) இதையே நடத்த இரண்டு அல்லது மூன்று மாதம் ஆகும் என்று சிலர் கூறிகொண்டு உள்ளார்கள்...... நடந்து முடித்த கலந்தாயில் அதிகபடியானயை Middle school என்று கூறினார் கள். அது போல் இல்லாமல் High school, higher secondary , middle school என அனைத்து vacant இடத்தையும் காண்பிக்க வேண்டும்.... --------–---------- முன்பு எடுத்த நபரின் பள்ளியையும் vacant இடமாக அவருக்கு பின்பு வருமவருக்கு கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தி கிரேட் இந்தியா நியூஸிற்காக பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended