• முகப்பு
  • tamilnadu
  • பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி எப்போது? கல்வித்துறை அமைச்சர் தகவல்.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி எப்போது? கல்வித்துறை அமைச்சர் தகவல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நிதி நிலை சீராகும் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் - கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு எப்போது? ஜூன் மாதம் 13 ல் காலை சிற்றுண்டி வழங்கும்திட்டம் அமலுக்கு வராது. பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப் படும் எப்போது திட்டத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் பேசி முடிவு நிதி நிலை சீராகும் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்புகிறது கல்வியாண்டு. வரும் கல்வியாண்டில் ( 2022 - 23 ) 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்படவுள்ளது காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப் படாது. பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 10,11 & 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வில் நடத்தப் படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப் பட்டிருப்பின், Grace Marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அடுத்தக்கல்வி ஆண்டு பொதுத்தேர்வு தேதிகள். ஏப்ரல் 3 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் மார்ச் 13 ம் தேதி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவக்கம் . மார்ச் 14 - ம் தேதி 11 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவக்கம். 1 வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ஜூன் 13 ம் தேதியும், 12 ம் வகுப்புக்கு ஜூன் 20 ம் தேதியும், 11 ம் வகுப்புக்கு ஜூன் 27 ம் தேதியும் பள்ளிகள்திறக்கப்படும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended