• முகப்பு
  • நெல் ஜெயராமன் நினைவு தினம் பாரம்பரிய உணவு வழங்கி அனுசரிப்பு ..

நெல் ஜெயராமன் நினைவு தினம் பாரம்பரிய உணவு வழங்கி அனுசரிப்பு ..

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருத்துறைப்பூண்டி 2021 , டிசம்பர் 6 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பாரம்பரிய நெல் போராளி ஐயா நெல் ஜெயராமன் அவர்களின் 3 - ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதி 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திருத்துறைப்பூண்டி முன்னாள் ஒன்றியகுழு துணைத்தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கலைராணி கண்ணன், பாரதமாதா தொண்டு நிறுவன தலைவர் எடையூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை நல மருத்துவர் ராஜா, அவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும்போது நமது மண்ணின் மைந்தரும், 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அந்த நெல் ரகங்களை உழவர்கள் மத்தியில் பரவ செய்து , அனைவரும் நஞ்சில்லாத உணவு உன்ன வேண்டும் என்று பாடுபட்ட நெல் ஜெயராமன் அவர்களுடைய நினைவு நாளை தமிழக அரசு பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் . அதுமட்டுமல்லாமல் திருத்துறைப்பூண்டி பகுதியில் நெல் ஜெயராமன் அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் . மேலும் அவர் பேசும்போது பொதுமக்களாகிய நாமும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதுடன் பயன்படுத்துவதே உண்மையாக நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும் என்றார். பாலம் தொண்டு நிறுவன செந்தில்குமார், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி நெல் ஜெயராமன் சகோதரர்கள் ஞானசேகரன், செல்வராஜ் , ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended