• முகப்பு
  • tamilnadu
  • படித்த இளம் தலைமுறையினரின் வெளிநாட்டு மோகத்தால் நம் நாடு பின் தங்குகிறது.

படித்த இளம் தலைமுறையினரின் வெளிநாட்டு மோகத்தால் நம் நாடு பின் தங்குகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 12, 2023, 4:45:11 PM

திரை கடலோடியும் திரவியம் தேடு என்பது அக் கால பழமொழி. முந்தைய காலத்தில் நமது இந்திய திருநாட்டில் வளர்ச்சி என்பது குறைவு என்பதைவிட இல்லையெனவே கூறலாம். அதற்கு காரணம் நம் நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் நம் நாட்டு வளங்களை அவர்களது நாட்டுக்கு கொண்டு சென்றதாக வரலாறு. 1947 - ல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் விவசாயம் செழித் தோங்கியது. அதன் பயனாக நாடு செல்வச் செழிப்புறச் செய்தது. வருடங்கள் உருண்டோட ஆண்கள் மட்டுமே கல்வி கற்று பணிகளுக்கு சென்று வந்த நிலையில், பெண் குழந்தைகளும் கல்வி கற்கும் ஆர்வம் அதிகமாகி உயர்கல்வி, மாஸ்டர் கல்வி என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு கற்கத் தொடங்கினர். குடும்பத்தில் ஆண், பெண் என படிக்கும் ஆர்வம் அதிகரிக்கவும், நாகரிக வளர்ச்சியினால் சேற்றில் கால் வைத்து விவசாயம் செய்யும் எண்ணம் மங்கத் தொடங்கியது. இதனால், விவசாய நிலங்கள் அனைத்தும் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற வழி வகுத்தன. ஆண்கள் பணிக்குச் செல்ல வேண்டும், பெண்கள் வீட்டில் அடுப்பு ஊத வேண்டுமென்ற நிலையும், காலமும் மாறி ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசு பணி உள்பட தனியார் துறைகளிலும், சொந்த தொழிலிலும் பணிக்குச் செல்ல துவங்கினர். வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா,அப்பா குறைவாக படித்திருந்தாலும் தங்களது குழந்தைகளின் விருப்பத்திற் கேற்ப நல்ல தரமான கல்வி நிலையங்களை தேர்ந்தெடுத்து கல்வி கற்பதற்காக தொலை தூரத்தில் இருக்கும் வெளி ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க துவங்கினர். இப்படிச் சென்று கல்வி பயில்வதால் பொது விவரங்கள் தெரிந்து மனதில் தைரியம் கூடி முனைப்புடன் செயல்பட உத்வேகம் அளிக்குமென எண்ணினர். கல்வி பயின்ற இளம் வயது குழந்தைகள் நமது நாட்டில் உழைத்து நம் குடும்பத்தை பேணி பாதுகாக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் உதிக்காமல் வெளிநாடுகளில் சென்று பணி புரிந்தால் கூடுதலான வருவாய் வருமென்ற எண்ணத்தை மனதில் விதைக்க துவங்கியதால், கற்ற எவரும் தனது சொந்த ஊரிலோ, சொந்த மாநிலத்திலோ பணி செய்வதை குறைவாக நினைக்கத் தொடங்கியுள்ளனர். வெள்ளையர்களின் ஆதிக்க சக்தியிலிருந்து மீட்டெடுக்க " வெள்ளையனே வெளியேறு " என்ற கோஷத்துடன் நமது நாடு சுதந்திரம் பெற்றால் வளர்ச்சியுறும் என நீங்காத கனவுகளுடன் சுதந்திர இந்தியாவிற்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகள் போன்று சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவை நனவாக்குவோம் என்ற உறுதியுடன், வெளிநாட்டு மோகத்தை அறவே துறந்து நாம் கற்ற கல்விக்காக நமது நாட்டிலேயே பணிபுரிவோம் என அனைவரும் எண்ணினால் நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தொழில் வளர்ச்சி பெற்று, அனைவருக்கும் வேலை என்ற நிலை வந்து நாடே செல்வச் செழிப்புடன் திகழும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை... சிறப்பு செய்தியாளர் : மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended