• முகப்பு
  • சோழர் காலத்து தலங்களில் ஒன்றான, ஸ்ரீ பூவராஹன் வைத்தீஸ்வரர் கோயிலில் தூய்மை செய்யும் பணி நடை?

சோழர் காலத்து தலங்களில் ஒன்றான, ஸ்ரீ பூவராஹன் வைத்தீஸ்வரர் கோயிலில் தூய்மை செய்யும் பணி நடை?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான, ஸ்ரீ பூவராஹன் வைத்தீஸ்வரர் திருக்கோயில், சோழர் காலத்திலிருந்து உள்ளூர் பொதுமக்கள், மற்றும் வெளி மாவட்டம் , வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம் . இந்நிலையில் நித்தீஸ்வரர் பரதநாட்டியம் ஆடிய போது ஒரு துளி வேர்வை தண்ணீர் கீழே விழுந்ததனால், இந்த திருக்குளம் உருவானதாக ஒரு வரலாறும் உண்டு. இதனால் தோஷம் உள்ளவர்கள் திருமணம் ஆகாதவர்கள், இந்த திருக்குளத்தில் குளித்துவிட்டு நித்தீஸ்வரரை தரிசனம் செய்து சென்றாள் , சர்வ பாக்கியமும் கிடைக்கும் என்பதை பக்தர்கள் நம்பி வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை ஆங்காங்கே போட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்த நிலையில் குளம் அசுத்தமாகியது , இதனை கண்ட பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன், ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப் தலைவர் பிபி பிரகாஷ் , திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், வீரவேல் , சேட்டு , பார்த்த சாரதி , மற்றும் கோயில் இஓ சரவணகுமார் , சதீஷ்குமார் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் , பிபிஜே பள்ளி மாணவர்கள் , ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதோடு பக்தர்கள் நீராடும் வகையில் பேரிகார்டு அமைத்து தருவதாக பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன் தெரிவித்தார். சமஸ்கிருத மந்திரங்களை முழங்கி சுத்தம் செய்யும் பணியை துவங்கியது , பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூர் செய்தியாளர் சண்முகம். #கடலூர் #ஆன்மீகம் #சோழர் #நித்தீஸ்வரர் #ஸ்ரீமுஷ்ணம் #வைத்தீஸ்வரர் #பூவராஹன் #tginews #thegreatindianews #latesttamilnews #breakingtamilnews #news #todaystamilnews #tamilnewslive #headlinestoday

VIDEOS

RELATED NEWS

Recommended