• முகப்பு
  • district
  • கும்பகோணத்தில் காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கும்பகோணத்தில் காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை 2006ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். அப்போது முதல் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், காமராஜரின் 120 பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாலக்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு சந்திரசேகர மூப்பனார் மாலை அணிவித்து, பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்,நோட்டு பேனா புத்தகம், ஜியாமன்டரி பாக்ஸ், பரிச்சை அட்டை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேர்தல் உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜாங்கம் மாவட்டத் தலைவர் சாதிக் அலி மாநகரத் தலைவர் சங்கர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் துரைஜெயபால், மாநில நெசவாளர் அணி பொதுச் செயலாளர் செல்வம், வட்டார தலைவர்கள் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ் மழவராயர், மாவட்ட துணைத் தலைவர் சிவா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருண்குமார், மாநகர நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ராமதாஸ், இளைஞரணி துணைத் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended