• முகப்பு
  • சென்னை
  • ரயில் மூலம் கஞ்சா எடுத்து வந்த வடமாநில பெண் கைது 10 கிலோ கஞ்சா பறிமுதல், பெண்ணை வைத்து கஞ்சா எடுத்து வந்தது அம்பலம்.

ரயில் மூலம் கஞ்சா எடுத்து வந்த வடமாநில பெண் கைது 10 கிலோ கஞ்சா பறிமுதல், பெண்ணை வைத்து கஞ்சா எடுத்து வந்தது அம்பலம்.

S.முருகன்

UPDATED: Mar 27, 2024, 12:23:01 PM

தடை செய்யப்பட்ட கஞ்சா வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு எடுத்து வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்த வட மாநில பயணிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வட மாநில பெண்ணை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது

இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது பிடிப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ்(25), என்பதும் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

மேலும் வட மாநிலங்களில் இருந்து வாலிபர்கள் கஞ்சா எடுத்து வந்தால் போலீசார் சோதனையில் சிக்கிக் கொள்வதாகவும் எனவே போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பெண்ணிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பினால் போலீசாரிடம் சிக்க மாட்டார் என நினைத்து கஞ்சாவை கொடுத்து அனுப்பியதாகவும் சென்னை வந்ததும் இங்கிருந்து வேறு ஒருவரிடம் கஞ்சாவை கைமாற்றி விடுவதற்கு இருந்ததும் தெரியவந்தது

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் யாரிடம் கொடுப்பதற்காக இருந்தார் என்பதை விசாரிக்க அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் பாண்டிச்சேரியில் வங்கி பணிபுரிந்து வந்ததாகவும் தன்னுடன் தங்கி இருந்த தோழிகள் கஞ்சாவை கொடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இதையடுத்து அவரிடம் இருந்த தோழிகள் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended