அதிமுகவில் புதிய திருப்பம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இரட்டைஇலையை எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம். களத்தில்குதித்த மாயத் தேவர் பாசறை. மாநில முக் குலத்தோர் இளைஞர்பாசறை பெயரில் அ.தி.மு.கவின் முதல் எம்.பியும், இரட்டைஇலை சின்னத்தை தேர்ந்தெடுத்த முன்னாள் எம்.பியுமான கே. மாயத் தேவர் பெயருடன் ஓ. பன்னீர் செல்வம் படத்துடன் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். சென்னையில் கடந்த 23 ஆம்ந் தேதி அ.தி.மு.க பொதுக் குழு கூட்டப் பட்டது. சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன் நடை பெற்ற இப்பொதுக்குழுக்கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க பொதுக்கு ழுவில் எந்த தீர்மானமும் நிறை வேற்றவும் ஒப்புதல் தரப் படவில்லை. அத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக நியமிக்கும் தீர்மானத்துடன் அடுத்த பொதுக் குழு ஜூலை 11 ஆம்ந்தேதி நடைபெறும் என அவர்களே அறிவிக்கப் பட்டார்கள். இதற்கு எதிர்ப்புதெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக் குழுவில் இருந்து வெளி நடப்பு செய்தனர். அப்போது ஓ. பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் உருண்டைகள்வீசப்பட்டன. ஓ. பன்னீர் செல்வத்தின் பிரசார வேனின் டயரும் பஞ்சராக்கப் பட்டது. அ.தி.மு.க பொதுக் குழுவில் ஓ. பன்னீர் செல்வம் மிக மோசமாக அவமானப் படுத்தப் பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அ.தி.மு.கவில் ஏற்பட்ட மோதலை அடுத்து தமிழகம் முழுவதும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியின் படத்தையும் உடைத்தும், மையால் அழித்தும் எதிர்ப்புக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் சம்பவம் நடை பெற்றுள்ளது. மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறைபெயரில் அ.தி.மு.கவின் முதல் எம்.பியும், இரட்டைஇலை சின்னத்தை தேர்ந்தெடுத்த முன்னாள் எம்.பியுமான கே. மாயத் தேவர் பெயருடன் ஓ. பன்னீர்செல்வம் படத்துடன் போஸ்டர்களை ஒட்டிய உள்ளனர். இது அப்பகுதி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், ‘இரட்டைஇலை சின்னத்தை வாங்கியதே நாங்கதான்’ என ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக அ.தி.மு.கவின் முதல் எம்.பியான மாயத் தேவர் புகைப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. அதில் இரட்டை இலைச்சின்னம் வாங்கிக்கொடுத்ததே நாங்க தான், 'எவனுக்கும் அஞ்ச மாட்டோம், எவனுக்கு விட்டுத்தர மாட்டோம்' என மாயத்தேவர் புகைப்படத்துடன், மாநில முக்குலத்தோர் பாசறை சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து சின்னாள பட்டி எல்லப் பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க இளைஞர் இளம் பெண்கள் பாசறை முன்னாள் தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கே. மாயத் தேவர் மகன் செந்தில் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவில் இருந்து ஓரங்கட்டப் படுவார்’ என்று கூறினார். இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் உடனடியாக போஸ்டர்களை கிழித்து அப்புறப் படுத்தினர். எம்.ஜி.ஆர் 1972 ம் ஆண்டில் அ.தி.மு.கவை தொடங்கியவுடன் முதன் முதலாக திண்டுக் கல்லில் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தனதுகட்சி வேட்பாளராக மாயத் தேவரை நிறுத்தினார். அவர் இரட்டைஇலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். அன்றுமுதல் அ.தி.மு.கவின் சின்னம் ஆகிவிட்டது. இரட்டை இலைச்சின்னம். அதன் பின்னர் மாயத் தேவர் மூன்றுமுறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். இந்த இரட்டை இலைச்சின்னம் யார்பக்கம் இருக்கிறதோ அவர்களுக்குததான் ஆதரவு என்பது தொண்டர்களின் நம்பிக்கை. அந்தவகையில் ஓ.பி.எஸ் ஐ அ.தி.மு கவிலிருந்து ஓரங்கட்டி விட்டால் சின்னம் முடக்கப் படலாம் என்ற பேச்சு எழுந்தது. இரட்டை இலைச்சின்னத்துக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அடித்துக் கொண்டிருக்க மாயத் தேவர் போஸ்டர் அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி அ.தி.மு.க தொண்டர்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended