• முகப்பு
  • கல்வி
  • நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.

நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.

அருண்

UPDATED: May 17, 2023, 6:57:28 PM

திங்கட்கிழமை (15.05.23) தேசிய அளவிலான அடிப்படை அறிவியல் மற்றும் வானியல் தொழில்நுட்ப மாநாடு புதுச்சேரியில் உள்ள பாப் ஜான் பவுல் கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஒளிப்பட விளக்கம், கருத்து விளக்கம் மற்றும் சுவரொட்டி விளக்க காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய வானியல் ஆய்வு மைய அறிஞர் மற்றும் இயக்குனர் முனைவர் க்ரிஸ்பின் கார்த்திக் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் பங்கு பெற்ற நேரு நினைவுக் கல்லூரி முது அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் செல்வி ஆ.வித்யா, து.சினேகா மற்றும் ச.நிவேதா ஆகியோர் அல்ட்ராசோனிக் கண்டுபிடிப்பான் என்ற அறிவியல் ஆய்வு செய்து அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றனர்.

மேலும் இ.பிரியங்கா சுவரொட்டி மூன்றாம் பரிசு பெற்றார். ச.சரோஜினி மு.ராமலட்சுமி மற்றும் சி.சூர்யா ஆகியோர் வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு இந்த போட்டிகளுக்கு இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் அவர்கள் வழிகாட்டினார்.

இயற்பியல் துறை தலைவர், ஒருங்கிணைப்பாளர், கல்லூரி முதல்வர், கல்லூரி தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் பரிசு பெற்ற மாணவிகளை பாராட்டினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended