• முகப்பு
  • district
  • 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் விவசாயிகள் வேதனை.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் விவசாயிகள் வேதனை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மிக அதிக மழை பெய்ததின் காரணமாக விவசாயம் மூன்று போகம் விளைவிக்கப்பட்டது. தற்போது நவரை பருவம் விதைத்த விவசாயிகள் அறுவடை முடிந்து அந்த அந்த பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டவாக்கம் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் 4 ந்தேதி அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது . சுமார் 364 விவசாயிகள் இந்த அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்மணி களை விற்பனை செய்ய ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வருகின்றனர் . குறிப்பாக புரிசை ,போந்தவாக்கம் வரதாபுரம், மூலப்பட்டு, கொட்டவாக்கம், வளத்தூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தினம் தோறும் தங்களுடைய நெல்மணிகளை இந்த கொள்முதல் மையத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச்செல்ல லாரிகள் தொடர்ச்சியாக வராததன் காரணமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகுகின்றது. இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்களைப்போன்ற விவசாயிகளிடம் இருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு எடுத்துச்செல்ல கடந்த 3 நாட்களாக லாரிகள் வராததால் சுமார் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் இந்த கோடை மழையில் நனைந்து சேதமடையும் வாய்ப்பு உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர் . எனவே நுகர்பொருள் வாணிப கழகம் உடனடியாக லாரிகளை அனுப்பி அங்கு தேங்கி நிற்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லுமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended