• முகப்பு
  • aanmegam
  • ஈக்காதிடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்புதொழுகை 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டார்கள்.

ஈக்காதிடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்புதொழுகை 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டார்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாத்திமாமலை பாரம்பரிய ஈக்காதிடலில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈகைத் திருநாள் என்னும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பக்ரீத் பண்டிகை பொது சிறப்புதொழுகைக்கு மணப்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை தொழுதார்கள். இந்த சிறப்பு தொழுகை நிறைவாக நாடு செழிக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும் , மனிதர்களுக்கு வரும் நோயிலிருந்து காக்க வேண்டும் , அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் ஒவ்வொருவர் மனதிலும் இறைவனின் சாந்தியும் , சமாதானமும் நிலவ வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வேண்டுதல் செய்தார்கள். இந்த பக்ரீத் பண்டிகை பொதுத்தொழுகைக்கு மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன் முன்னிலையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended