• முகப்பு
  • district
  • திருவாரூரில் பெட்ரோல் டீசல் விலையை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பெட்ரோல் டீசல் விலையை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு சி.ஐ.டி யு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தி காக்கி சட்டை பேரணி என்கிற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி சி.ஐ.டி.யு திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியில் பெட்ரோல் டீசல் கேஸ் எரிபொருட்களின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை ஜி.எஸ்.டிக்குள்  கொண்டுவர வேண்டும். ஆட்டோ ஓட்டுனருக்கு வரியில்லாமல் மானியத்தில் தினமும் 5 லிட்டர் பெட்ரோல் டீசல் கேஸ் வழங்கிட வேண்டும்.ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெறும் ஊழல்களை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும்.ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ பி.எஃப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறு சிறு குற்றங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பறிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் பங்கு பெற்றவர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும் இந்த பேரணி சிலம்பம் கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுடன் புலிவலம் கடை வீதியிலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் தெற்கு வீதி வரை நடைபெற்றது. பேரணியின் காரணமாக திருவாரூர் வாழ வாய்க்கால் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி செல்லும் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவியது. பேரணியை தொடர்ந்து ஆட்டோ சம்மேளன தலைவர் குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.அதனை தொடர்ந்து நாளை 2 வது நாள் மாநில மாநாடு தெற்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் செய்தியாளர் இலவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended