• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திராவிட மாடல் ஆட்சியில் லேசான காற்றுக்கு சென்னை மாநகரப் பேருந்தின் மேற்குறை பிரிந்ததால் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்

திராவிட மாடல் ஆட்சியில் லேசான காற்றுக்கு சென்னை மாநகரப் பேருந்தின் மேற்குறை பிரிந்ததால் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்

L.குமார்

UPDATED: May 30, 2023, 2:09:49 PM

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்ற முதல் பழவேற்காடு வரை 558 பி என்ற வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இன்று 30.5.2023 மதியம் செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி வழியாக பழவேற்காட்டுக்கு இயக்கப்பட்ட இந்த பேருந்து பிரளயம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது லேசாக அடித்த காற்றுக்கு திடீரென சென்னை மாநகர பேருந்து மேற்கூரை பிரிந்தது.

உடனடியாக அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து அலறி அடித்து கீழே இறங்கி ஒடியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

மேலும் இந்த விடியா திராவிட மாடல் அரசின் பேருந்து போக்குவரத்து மூலம் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும்,

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கபடமாலும் புதிய பேருந்துகளை வாங்கமால் பழைய பேருந்துகளை கொண்டு இயக்குவதால் இது போன்ற விபத்து அவ்வப்போது நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended