• முகப்பு
  • நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரமாக நிருத்தப்பட்டதால் பயணிகள் அவதி ?

நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரமாக நிருத்தப்பட்டதால் பயணிகள் அவதி ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் தனியார் கிரஷரை மூட கோரி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலமையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியில் திருச்சி to புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரமாக நிருத்தப்பட்டதால் பயணிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலை அருகே வந்தனாகுறிச்சி ,வெல் வயல்பட்டி ஆதிதிராவிடர் காலனி என்ற கிராமத்தில் பல வருடங்களாக தனியாருக்கு சொந்தமான கல்லுடைக்கும் கிரசர் இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு சுற்று சூழலை பாதிக்கும் வகையில் இந்த கிரஷர் இயங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் எனவும் குடிதண்னீர் மாசு படிவதல் என பொது மக்களுக்கு பல்வேறு இடையூறாக இயங்கும் இந்த கிரஷர் அரசு புறம்போக்கு நிலத்தில் எந்த ஆவணம் இல்லாமல் அரசுக்கு புறம்பாக அதிகாரிகளின் உதவியோடு இயங்கிவருகிறது எனவும் கிரஷரை உடனடியாக அகற்ற வலியுறித்தி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை தலமையில் ஒரு மணி நேரமாக கோஷமிட்டு சாலைமறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் திருச்சி டு புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து பாதிப்பு. புதுக்கோட்டை செய்தியாளர் பழனி. #புதுக்கோட்டை #நெடுஞ்சாலையில் #traffic #tiruchy #pudukotai #சாலைமறியல் #ஆர்ப்பாட்டம் #tginews #tamilnadunews #todaynews #news #tamilnews #newstamil #latesttamilnews

VIDEOS

RELATED NEWS

Recommended