• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ திருமழிசை காக்களூர் அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை  அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ திருமழிசை காக்களூர் அம்பத்தூர் தொழில்பேட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை  அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆய்வு.

சுரேஷ் பாபு

UPDATED: May 18, 2023, 12:13:12 PM

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் 475 தொழில் நிறுவனங்கள் பயன் பெரும் வகையில் ரூபாய் 2.72 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு எட்டு லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து தொழிற்பேட்டையின் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்தி பராமரிப்பு செய்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9000 சதுர அடி பரப்பளவில் ரூபாய் 2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினை ஆய்வு செய்தார். அதில் 4500 சதுர அடியில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கிற்கான வாடகை விரைந்து நிர்ணயித்து தொழில் முனைவோருக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

காக்களூர் தொழிற்பேட்டையில் ரூபாய் 8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் தெருவிளக்குகள் உயர் கோபுரம் மின்விளக்குகள் கழிவுநீர் குழாய் ஆகிய பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மத்திய மென்பொருள் சோதனைக் கூடத்தில் ரூபாய் 8.27 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட எல்இடி விளக்குகள்,

சோதனை கூடம் தீ பரவாமல் தடுக்கும் மின்சார கேபிள் சோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார் இதற்கு முன் திருமறை செய்தி தொழிற்பேட்டைகள் ரூபாய் 6.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உடன் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ‌ஆ.ப. பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம்,

கண்காணிப்பு பொறியாளர் எம்.ஆர். சோமசுந்தரம், சிட்கோ பொறியாளர்கள், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.சேகர், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் கவுன்சிலர் எத்திராஜ் தொழிற்பேட்டை கிளை மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended