திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில்  பல கடைகள் ஆக்கிரமிப்பு.

கோபிநாத்

UPDATED: May 5, 2023, 7:04:21 PM

திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில்  பல கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைக்காரர்கள் தங்கள் கடைகளை நீட்டியுள்ளனர்.

இதனால் பயணிகள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து கடைகள் ஆக்கிரமிப்பு இருப்பதாக புகார்கள் அதிகாரிகளுக்கு சென்றன.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:

மாநகராட்சி நிர்வாகம் நடத்துவது கண்துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றும் தான். அதிகாரி அகற்றி சென்ற ஒரு வாரத்துக்குள் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.

மூன்று மாதத்துக்கு ஒரு தடவை மாநகராட்சி சம்பிரதாய அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது.

ஆனால் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.

உண்மையான ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended