• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வேலை வாய்ப்புத்திறன்கள் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மதுரை கோ புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

வேலை வாய்ப்புத்திறன்கள் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மதுரை கோ புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

மாமுஜெயக்குமார்

UPDATED: May 19, 2023, 3:38:42 PM

11-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது மாணவர் நலன் கருதி தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திறன்கள் என்ற பாடத்தில் மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவர் எம்.மாதவன் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த பாடம் தமிழக அளவில் இந்த கல்வியாண்டில் (2022-2023)  அறிமுகபடுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களைப் புரிந்து கொண்டு ஆங்கில மொழித்திறன்கள், தகவல் தொடர்புத்திறன்கள், மின்னணு திறன்கள், தொழில் முனைவு நிதி கல்வியறிவு போன்ற 21ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பு சார்ந்த உலகத்திற்கு மாணவர்களை தயார் ஆக்குவதே வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தின் நோக்கமாகும்.

சாதனை படைத்த மாணவர் எம்.மாதவனை பள்ளிநிர்வாகிகள், பள்ளித்தலைமையாசிரியர் ஷேக் நபி, கல்வி துறையினர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended