LPG தகவல்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு. வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை வினியோகம் செய்யும்போது டெலிவரி மேன் கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த விலையில் சிலிண்டர் விற்பனை ஆகிறது என்பது குறித்தான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *சிலிண்டர் விலை* நாடு முழுவதுமே வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே அடிக்கடி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் டெலிவரி மேன்களும் அரசு நிர்ணயித்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வாங்குவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. அதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு விலையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட கூடுதலாக டெலிவரி மேன்பணம் கேட்கும் பட்சத்தில் யாரும் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கேஸ் சிலிண்டரின் விலை எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு என்பது குறித்தான விளக்கத்தைப் பார்க்கலாம். அரியலூரில் ரூ.1040.5 விலைக்கும், சென்னையில் ரூ.1018.5 விலைக்கும், கோவையில் ரூ.1032 விலைக்கும், கடலூரில் ரூ.1039 விலைக்கும், தர்மபுரியில் ரூ.1041 விலைக்கும், திண்டுக்கல்லில் ரூ.1041 விலைக்கும், ஈரோடில் ரூ.1041விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், காஞ்சிபுரத்தில் ரூ.1045 விலைக்கும், கரூரில் ரூ.1045 விலைக்கும், மதுரையில் ரூ.1087 விலைக்கும், நாகப்பட்டினத்தில் ரூ.1024 விலைக்கும், நாகர்கோவிலில் ரூ.1045 விலைக்கும், நாமக்கலில் ரூ.1049.5 விலைக்கும், ஊட்டியில் ரூ.1049.5 விலைக்கும், பெரம்பலூரில் ரூ.1058.5 விலைக்கும், புதுக்கோட்டையில் ரூ.1049 விலைக்கும், ராமநாதபுரத்தில் ரூ.1052.5 விலைக்கும், சேலத்தில் ரூ.1052.5 விலைக்கும், சிவகங்கையில் ரூ.1058 விலைக்கும், தஞ்சாவூரில் ரூ.1060.5 விலைக்கும், தேனியில் ரூ.1060.5 விலைக்கும், திருவள்ளூரில் ரூ.1018.5 விலைக்கும், திருச்சிராப்பள்ளியில் ரூ.1039 விலைக்கும், திருநெல்வேலியில் ரூ.1049 விலைக்கும், திருப்பூரில் ரூ.1040.5 விலைக்கும், திருவண்ணாமலையில் ரூ.1018.5 விலைக்கும், திருவாரூரில் ரூ.1039 விலைக்கும், வேலூரில் ரூ.1067 விலைக்கும், விழுப்புரத்தில் ரூ.1020 விலைக்கும், விருதுநகரில் ரூ.1044 விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended