• முகப்பு
  • குற்றம்
  • கலாசேத்ரா பவுண்டேஷன் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்.

கலாசேத்ரா பவுண்டேஷன் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்.

TGI

UPDATED: Mar 31, 2023, 7:45:11 AM

கலாசேத்ரா பவுண்டேஷன் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலாஜி, வேல்முருகன், அருள் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலாசேத்திர பவுண்டேஷன் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு புறப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறிந்தேன். விவரம் சேகரிக்க வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர் ஆகியோரை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.

இன்று காலையில் மீண்டும் வருவாய்த்துறை காவல்துறை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். *அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended