• முகப்பு
  • crime
  • கும்பகோணம் திருவிடைமருதூர் தலைமை மருத்துவமனையின் அவல நிலை - அதிர்ச்சி ?

கும்பகோணம் திருவிடைமருதூர் தலைமை மருத்துவமனையின் அவல நிலை - அதிர்ச்சி ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் தாலுகா அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. கடந்த சில மாதங்கள் முன்பு திருவிடைமருதூர் தாலுகா அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள் என அமைச்சர்கள் பங்கேற்ற விழாவும் நடந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் பல்வேறு ஊர்களிலிருந்து வருகின்ற நோயாளிகள் அங்கிருந்து கும்பகோணம் செல்லவேண்டிய அவதி உள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் மருத்துவமனை இருளில் மூழ்கிக் கிடந்தது. இருள் சூழ்ந்துள்ள மருத்துவமனைக்கு அழகேசன் சீமாட்டி தம்பதியினர் பிரசவத்திற்காக வந்தனர் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசவ அறையில் யுபிஎஸ் வெளிச்சத்தில் சீமாட்டிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் காலில் வெட்டுப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் இல்லாமல் கும்பகோணம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் தாலுக்கா மருத்துவமனையை நம்பி இரவு நேரங்களில் வருகின்ற பல்வேறு நோயாளிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். தாலுக்கா தலைமை மருத்துவமனை என பெயரளவில் இருந்தாலும் போதிய வசதிகள் இல்லாமல் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்தடை ஏற்படும் நேரங்களில் ஜெனரேட்டர் இயங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended