• முகப்பு
  • aanmegam
  • கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் தொடங்கியது

கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் தொடங்கியது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது ஸ்ரீரங்கம் , திருப்பதி திவ்ய தேசங்களுக்கு அடுத்ததாக ஏழு ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது . தமிழகத்திலேயே பெரிய தேர்களை ஒன்றான சித்திரை தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள திருதேரோட்டமானது தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் உயரம் 110 அணியாகவும் 450 டன் எடையும் கொண்டது, நான்கு குதிரைகள் பிர்மா தேரினை ஓட்டுவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended