• முகப்பு
  • ஆன்மீகம்
  • நாகை அருகே கலசம்பாடி அருள்மிகு நற்கூந்தலழகி அம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன்

நாகை அருகே கலசம்பாடி அருள்மிகு நற்கூந்தலழகி அம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன்

செ.சீனிவாசன்

UPDATED: May 30, 2023, 6:19:14 AM

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அடுத்த கலசம்பாடியில் அருள்மிகு நற்கூந்தலழகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் 19 ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

முன்னதாக அம்மன் மணிமண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended