• முகப்பு
  • education
  • பெண் குழந்தைக்கான பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நமது கடமை - அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி பேட்டி.

பெண் குழந்தைக்கான பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நமது கடமை - அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி பேட்டி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 30, 2023, 7:49:06 PM

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!" என் உறுதிமொழி வாசித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தற்பொழுது பொதுத்தேர்வு வர உள்ளது இதில் சுமார் 25 லட்சமான மனைவிகள் தேர்வு எழுத உள்ளனர். பல தேர்தலின் முடிவுகளை பார்த்து நான் சொல்வது மாணவர்கள் பெண் குழந்தைக்கு சமமாக படிக்க வேண்டும். பொதுத்தேர்வுக்கான அனைத்து ஆய்த பணிகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு சதவீதம் அதிகம் வரும். பெண் குழந்தைக்கான பாதுகாப்பான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது நமது கடமை ஆண்களும் இதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் குறைந்த அளவு விலையில்லா புத்தகப் பைகளை வழங்கினோம். அதில் தரத்தில் குறைவு ஏற்பட்டதால் அரசு அதனை நிறுத்தி உள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளி துவங்கும் பொழுதே அனைவருக்கும் விலையில்லா புத்தகப்பை வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இது போன்ற காலதாமதம் ஏற்படாது. கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கான சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இரண்டு நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை தீர்க்கப்படும். தமிழகத்தில் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். தொடக்கப் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு அடிக்கல் நாட்டு விழா வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி காட்பாடியில் தமிழக முதல்வர் முதற்கட்டமாக 240 கோடியில் நடைபெற உள்ளது. 7500 கோடி ரூபாய் பேராசிரியர் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள், கழிப்பறைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவித்தார். திருச்சி மாவட்ட செய்தியாளர் ஜே.கே

VIDEOS

RELATED NEWS

Recommended