நற்சிந்தனை நல்லதே தருமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரு மனிதன் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் முறை சிந்திப்பதாக கனடாநாட்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து உள்ளனர். மனிதனாய் பிறந்து விட்டால் சிந்திக்காமல் இருக்கமுடியாது. குழந்தை பருவத்தில்தொடங்கி முதுமைபருவம் வரை வயதிற் கேற்ப சிந்தனைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும். சிந்தனையில் நல்லவையும் உண்டு தீவையும் உண்டு. எனவே சிந்தனை இல்லாமல் மனிதனுக்கு ஒருநாள்கூட முழுமை பெறாத என்றே கூறலாம். கனடாநாட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வை மேற் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு சராசரி மனிதன்நாள் ஒன்றுக்கு 6,200 முறை சிந்திப்பதாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அவர்கள் மனிதனின் மூளையில் சிந்திக்கும் இடம்தொடங்கி முடியும் இடம்வரை அடையாளப் படுத்தி வைத்து இருப்பதாக கூறுகின்றனர். ஒரு மனிதனை தனிமைப் படுத்தி அவன் ஒரே சிந்தனை கொண்டவனாய் இருந்தால் அந்தநபரை "சிந்தனை புழு" என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். முகமலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதியநாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும். நல்லதே நினைப்போம் நல்லதேநடக்கும் நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம். ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended