• முகப்பு
  • World
  • குற்றம் புரிந்தால் படத்தின் ஹீரோ ஆதிக் பாபுவின் பேட்டி.

குற்றம் புரிந்தால் படத்தின் ஹீரோ ஆதிக் பாபுவின் பேட்டி.

TGI

UPDATED: Feb 19, 2023, 7:59:25 PM

'குற்றம் புரிந்தால்' தமிழ் திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்திற்கு நீங்கள் எப்படி தயாராயிருக்கிறீர்கள், படத்தில் உங்களது சிறந்த காட்சி எது?

ஒரு படத்தின் அனைத்து காட்சிகளுமே முக்கியம்தான். இதில் சிறந்த காட்சி என்று எப்படி பிரிப்பது.

படத்திற்கு எப்படி தயாராகிறேன் என்று கேட்டால், பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை எது தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்து, ஒவ்வொரு காட்சியிலும் அந்த கதாபாத்திரம் என்ன விரும்புகிறது என்பதைக் கண்டறிந்து, பிறகு அந்த கதாப்பாத்திரம் மற்ற கதாபாத்திரத்துடன் எதைப் பகிர்ந்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்து, கதாபாத்திரத்திற்கான யதார்த்தத்தை உருவாக்க, என் சொந்த குணாதிசயங்களையும் அனுபவங்களையும் பயன்படுத்த்துவேன்.

படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட தடைகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் பற்றி?

தடைகள்னு எதுவும் சொல்ல முடியாது, கஷ்டபட்ட காட்சினு சொல்லலாம், படத்தில் ஒரு தெருவில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய வரும் போது, அவர் என்னிடமிருந்து தப்பித்து சண்டை போடுவாரு, அந்த சண்டையில் எனக்கு நிஜமாகவே அடி விழுந்திருந்திருச்சு, ஆனாலும் நான் அதை இயக்குனரிடம் காட்டிக்கொள்ளாமல் முழு இரவும் நடித்து முடித்தேன்.

உங்களின் சக நடிகர்கள் மற்றும் குழுவின் ஆதரவு பற்றி?

அனைவரும் அவங்களுடைய காதப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார்கள், M s பாஸ்கர் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தார். அபிநயா அவங்களால பேச முடியாதே தவிர, அவர்களுடைய நடிப்பு சிறப்பு, எனக்கு ஹீரோயினோட ஒரு லிப்லாக் காட்சி இருக்கு, எனக்கு ரொம்ப பயம் வந்துருச்சி, பின் இயக்குனர் வந்து அந்த காட்சியை எனக்கு எடுத்து சொல்லி ஒரு வழியாக என்னை நடிக்க வைத்தார்.

குற்றம் புரிந்தால் ஏன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும்?

"குற்றம் புரிந்தால்" ஒரு பழிவாங்கும் க்ரைம் திரில்லர் படம். இந்தப் படத்தின் கதைக்களம் சமூகப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் நீதிக்காக சீரழிந்த அமைப்புக்கு எதிராக போராடுவதை சித்தரிக்கும் படம்.

VIDEOS

RELATED NEWS

Recommended