• முகப்பு
  • ‘சர்வதேச செவிலியர் தினம்’ தி கேர் வாக்’.

‘சர்வதேச செவிலியர் தினம்’ தி கேர் வாக்’.

நெல்சன் கென்னடி

UPDATED: May 12, 2023, 10:42:09 AM

சென்னை: மே 12, 2023: தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் புரோட்டான் சிகிச்சை மையம் என புகழ்பெற்றிருக்கும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடுவதற்காக ‘தி கேர் வாக்’ என்ற பெயரில் ஒரு தனிச்சிறப்பான ஃபேஷன் நடை நிகழ்வை இன்று நடத்தியது.

இந்நிகழ்வில் சிகிச்சையின் மூலம் புற்றுநோயை வென்ற சாதனையாளர்களுடன் APCC -ன் நைட்டிங்கேல்களும் அழகாக நடை பயின்றனர்.

தங்கள் வாழ்க்கையில் மிகக் கடுமையான காலகட்டத்தின்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டெழுவதற்கு சிகிச்சையோடு சேர்த்து அன்பையும், அக்கறையான கவனிப்பையும் வழங்கிய செவிலியர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

‘செவிலியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில்’ நவீன செவிலியர் சேவையின் அடையாளமாக கருதப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் நிழற்படமும் திறந்து வைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மக்களவையின் மாண்புமிகு உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் தலைமை விருந்தினராக இந்த ஃபேஷன் வாக் நிகழ்வில் பங்கேற்றார்.

புகழ்பெற்ற ஃபேஷன் வடிவமைப்பாளரான சிட்னி ஸ்லேடன், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழும புற்றுநோயியல் மற்றும் பன்னாட்டு செயல்பாடுகள் துறையின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி, டிரீம்ஜோன் ஸ்கூல் ஆஃப் கிரியேட்டிவ் ஸ்டடிஸ் - ன் மண்டல தலைவரும், பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளருமான மிஸ். பீனா பாஷா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

APCC – ன் மருத்துவ இயக்குனரும் மற்றும் மூளை நரம்பியல் - புற்றுநோயியல் துறைத் தலைவருமான டாக்டர். ராகேஷ் ஜலாலி, தலைமை இயக்க அதிகாரி  கரண் பூரி, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். சாந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோரும், செவிலியர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுள் சிலராவர்.  

அவர்கள் பெறுகின்ற ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு முழுதகுதியும் கொண்டிருக்கும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிப்பதும் மற்றும் கொண்டாடி மகிழ்வதுமே இன்று நடைபெற்ற ‘தி கேர் வாக்’ நிகழ்வின் நோக்கமாகும்.

இது, வெறுமனே ஒரு ஃபேஷன் வாக் நிகழ்வு மட்டுமல்ல; கௌரவத்திற்கான நடை இது. எந்தவொரு மருத்துவமனையின் வெற்றிக்கும் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றான செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கும், கடும் உழைப்பிற்கும் நோயாளிகளது நலன் மீது கொண்ட தளராத மனஉறுதிக்கும், மனதின் ஆழத்திலிருந்து பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது இருந்தது.

நோயாளிகளின் கனிவான பராமரிப்பில் செவிலியர்கள் ஆற்றி வரும் இன்றியமையா பங்கை அங்கீகரிக்கும் விதத்தில் அவர்களது சேவை உணர்வை பாராட்டும் நோக்கத்தோடு இந்நிகழ்வின்போது செவிலியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் பணியாற்றும் எமது செவிலியர்களுள் ஒருவரால் மிக நேர்த்தியாக வரையப்பட்ட ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் உருவப்பட திறப்பு விழாவும் இன்றைய நாள் நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்றது.

மக்களவை உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி இவ்வுருவப்படத்தை திறந்து வைத்தார்.  

இந்நிகழ்ச்சியின்போது உரையாற்றிய நாடாளுமன்ற மக்களவையின் மாண்புமிகு உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, “நமது சுகாதார பராமரிப்பு அமைப்பு முறையின் வலுவான முதுகெலும்பாக செவிலியர்கள் திகழ்கின்றனர்.

அவர்களது பங்களிப்பு விலைமதிப்பற்றது; அவர்களது கடும் உழைப்பும், பணியின் மீதான அர்ப்பணிப்பும், உத்வேகமும், ஊக்கமும் தரக்கூடியது; சர்வதேச செவிலியர்கள் தினமான இன்று, நோயாளிகளின் உயிர்களை பாதுகாப்பதிலும் மற்றும் குறிப்பாக அதிக சவாலான இக்காலகட்டத்தில் மருத்துவர்களுக்கு சிறப்பான ஆதரவை வழங்குவதிலும் செவிலியர்கள் ஆற்றிவரும் அற்புதமான பணியையும்,

சேவையையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்; மனமார பாராட்டி நன்றியினை சமர்ப்பிக்கிறோம். நோயாளிகள் நலம் பெறுவதற்கு அவர்கள் வழங்குகின்ற தன்னலமற்ற சேவை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பை அங்கீகரித்து கௌரவிக்கும் இச்சிறப்பான நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார். 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் - ன் குழும புற்றுநோயியல் மற்றும் பன்னாட்டு செயல்பாடுகள் துறையின் தலைவர் திரு. ஹர்ஷத் ரெட்டி “சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பராமரிப்பை நோயாளிகள் பெறுவதை உறுதி செய்வதில் செவிலியர்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.

நோயாளிகளின் பராமரிப்பில் முதல் வரிசையில் நிற்பவர்கள் அவர்களே. சுகாதார பராமரிப்பு துறையில் எங்கும், எந்தவொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அவர்களது அர்ப்பணிப்பும், கடும் உழைப்பும் அத்தியாவசியமானவை என்பதை எவரும் மறக்க இயலாது. APCC -ல் நோயாளிகளுக்கான சிகிச்சை பராமரிப்பில் நிகரற்ற அர்ப்பணிப்பையும், தன்னலமற்ற சேவையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் எமது செவிலியர்கள் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.

விலை மதிப்பற்ற அவர்களது சேவைக்கு எமது நன்றியையும், சிறப்பான பங்களிப்பிற்கு எமது அங்கீகாரத்தையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.” என்று கூறினார். 

அனைத்து நபர்களும் பெறும் வகையில் சர்வதேச தரநிலைகளிலான உயர்சிகிச்சையை வழங்குவதே APCC – ன் குறிக்கோளாக எப்போதும் இருந்து வருகிறது. மானுடத்தின் நலனுக்காக கல்வி, ஆராய்ச்சி மற்றும் நலவாழ்வில் நேர்த்தி நிலையை எட்டவும் மற்றும் அதைத்தொடர்ந்து பராமரிக்கவும் அர்ப்பணிப்பு உணர்வோடு அது இருந்து வருகிறது.

கனிவான சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை இம்மருத்துவமனை அங்கீகரிக்கிறது; பணி வாழ்க்கையில் அவர்களது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பது மீது உறுதிகொண்டிருக்கிறது.  

இந்நிகழ்வின்போது உரையாற்றிய சிறப்பு விருந்தினரான திரு. சிட்னி ஸ்லேடன், “ஃபேஷன் வார நிகழ்வின்போது நாங்கள் வடிவமைத்திருக்கும் புதிய ஆடைகள் மற்றும் / அல்லது துணைப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக ஒரு ஃபேஷன் வடிவமைப்பாளரால் நடத்தப்படும் நிகழ்வே ஃபேஷன் ஷோ என்பதை ஒரு ஆடை வடிவமைப்பாளரான நான் நம்பவில்லை;

தன்னையும், தனது உணர்வுகளையும், படைப்பாக்கத்திறனையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவும் ஃபேஷன் ஷோ இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இன்று APCC -ல் நடைபெற்ற இந்நிகழ்வு, “உண்மையான உள்ளார்ந்த அழகின்” அடிப்படை சாரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கலந்து கொள்வதையும் மற்றும் நமது சமூகத்தின் உண்மையான அழகின் தூதர்களாகவும் நமது நலத்தைக் காக்கும் போர் வீரர்களாகவும் திகழும் செவிலியர்களின் கொண்டாட்டத்திற்கு பங்களிப்பு வழங்க வாய்ப்பு கிடைத்ததையும் ஒரு கௌரவமாகவே நான் கருதுகிறேன்.” என்று கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended