• முகப்பு
  • aanmegam
  • இந்தியா ஒற்றுமையான நாடு இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் - பாமக

இந்தியா ஒற்றுமையான நாடு இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் - பாமக

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் . பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் . தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது , இதுவே போதுமானது வேறு எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நீட் உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் மசோதா என்பது தமிழ்நாட்டிற்கு பொருத்தமான தமிழ் நாட்டிற்கு தேவையான மசோதா என்றும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் , எனவே ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் கொலை மற்றும் தற்கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன , ஆன்லைன் சோதனை ஏற்படும் இழப்புகளை தவிர்க்க சட்டப்பேரவையில் உடனடியாக வலுவான மசோதாவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் ரயில் தண்டவாளங்கள் போல தமிழக அரசும் தமிழக ஆளுநரும் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ். இன்றைய செய்திகள் கள்ளக்குறிச்சி தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,kallakurichi news,kallakurichi latest news tamil,kallakurichi today news tamil,India's unity will be affected if India seeks to impose a united country pmk anbumani ramadoss,mani

VIDEOS

RELATED NEWS

Recommended