• முகப்பு
  • district
  • ஓட்டேரி பஸ் நிலையத்திலிருந்து பாலமதி செல்லும் சாலையில் கணரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகள் அதிகரிப்பு.

ஓட்டேரி பஸ் நிலையத்திலிருந்து பாலமதி செல்லும் சாலையில் கணரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகள் அதிகரிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வேலூர் மாவட்டம் ,வேலூர் வட்டம் & தாலுகா ஓட்டேரி ஆர்ட்ஸ் கல்லூரி பாலமதி சாலையில். ஓட்டேரி பஸ் நிலையத்திலிருந்து பாலமதி செல்லும் சாலையில் கணரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகள் அதிகரிப்பு நாள் ஒன்றுக்கு இந்த சாலையில் சுமார் 4000 கல்லூரி மாணவர்கள் வந்த செல்கின்றனர், இந்த சாலையை கடந்து சுமார் 20 கிராம மக்கள் வந்து செல்கின்றனர் மற்றும் சுமார் 3000 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர் . இச்சாலையில் ஒரு மணி நேரத்தில் ஏழு (7) JCBகள் செல்கின்றது ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை டிப்பர் லாரிகள் மற்றும் 2000த்துக்கும் மேல் இரு சக்கர வாகனங்கள் கார் ஆட்டோ சுமார் 750 வாகனங்கள் செல்வதால் தினமும் சிறிய பெரிய விபத்துகள் என விபத்துகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த சூழலில் பள்ளி கல்லூரி நேரங்களில் அதிக போக்குவரத்து நெருக்கடி மற்றும் அதிகப்படியான விபத்துகள் அதிகரித்து வருகின்றதினால் இப்பகுதியில் செயல்படும் ஜல்லி குவாரிகளுக்கு அரசு தடைவிதிக்க வேண்டும். மற்றும் கணரக JCB வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலை 7யிலுருந்து 10மணிவரை மற்றும் மாலை 3 யிலிருந்து 6 மணிவரை தினமும் இந்த நேரத்தில் 3+3 = 6 மணிநேரம் இந்த வாகனங்கள் இயங்க முற்றிலும் தடை விதித்து சாலை பாதுகாப்பு உறுதி செய்திடவும். இந்நேரத்தில் காவல் படை வீரர்கள் பணியாற்றுபவர்களுக்கும் பெரிதும் பாதுகாப்பு இல்லாதசூழலில் மணவுலச்சலுக்காளாகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு முழுமையாக நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை பலகையுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு தந்து , உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் சார்பாகவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.

VIDEOS

RELATED NEWS

Recommended