திமுக ஆட்சி அமைத்து 2ம் ஆண்டு துவக்க விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோதலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது திமுக. கடந்த ஆண்டு இதே நாளில் (மே 7, 2021) முதல்வராக பொறுப்பேற்றாா் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகம் வந்த அவா் ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டாா். கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்துக்கு என தனித் துறை அமைப்பு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினாா். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் 130-க்கும் கூடுதலான தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் துறையைப் போன்றே கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், தொழில் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.2,500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு என ஏராளமான கவனிக்கத்தக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஓராண்டு சாதனை கொண்டாடும் விதமாக தமிழக முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகராட்சி சார்பில் 2ம் ஆண்டு துவக்க விழாவை யொட்டி கரிக்குலம் குப்பை கிடங்கில் 500 மரக்கன்றுகள் நடும் விழா துணை மேயர் சு.ப தமிழழகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் மேயர் சரவணன் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மாமன்ற உறுப்பினர்கள் ஆசைதம்பி அனந்தராமன் முருகன் தமிழ்ச்செல்வி சோடா கிருஷ்ணமூர்த்தி குட்டி தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended