• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருநெல்வேலியில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 415 மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 415 மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 29, 2023, 6:54:52 PM

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று (மே.29) திருநெல்வேலி மாவட்டத்திலும், வழக்கம்போல நடைபெற்றது.

கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப.கார்த்திகையன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து, மொத்தம் 415 கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, குடிநீர், சாலைகள், மின்வசதி போன்றவை தொடர்பாக பெறப்பட்ட இந்த மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

குறிப்பாக முதலமைச்ச ரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது, தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தின் போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, தலா 4,870 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளை, 13 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இதுபோல தனிநபர் ஒருவருக்கு, 5,375 ரூபாய் மதிப்பிலான தையல் எந்திரத்தையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மு.செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended