• முகப்பு
  • குற்றம்
  • திருநெல்வேலியில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட, கன்னியாகுமரி நபர் கைது!

திருநெல்வேலியில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட, கன்னியாகுமரி நபர் கைது!

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 24, 2023, 3:16:05 PM

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், பொட்டல்குளம் பகுதியை சேர்ந்தவர் திருத்தணிகை வேல் என்ற கார்த்திகேயன் (வயது.52). இவர், சென்னை தலைமைச் செயலகத்தில், தான் வேலை வருவதாக கூறி, மத்திய அரசின் திட்டத்தின் மூலம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறி,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் இன்னும் இரண்டு நபர்களிடமிருந்து, கடன் பெறுவதற்கென முன்பணமாக செலுத்தச் சொல்லி, 15லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணத்தை, அந்த மூன்று நபர்ர்களிடமிருந்து பெற்று, மோசடி செய்து, ஏமாற்றியுள்ளார். 

எனவே, பணமோசடியில் ஈடுபட்ட, திருத்தணிகை வேல் என்ற கார்த்திகேயன் மீது, குற்றநடவடிக்கை எடுக்குமாறு, ஏமாற்றப்பட்ட மூன்று பேராகளில் ஒருவரான முருகேசன், காவல்துறையில், புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில், புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்‌‌.ரகு, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ப.முத்து, சார்பு ஆய்வாளர் பவுல், தலைமை காவலர்கள் ஜான்போஸ்கோ, ஆல்வின் கில்பர்ட் ஆகியோர் அடங்கிய, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, எதிரியான திருத்தணிகை வேல் என்ற கார்த்திகேயனை, தனிப்படை போலீசார், இன்று (மே.24) காலையில், கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், விரைந்து செயல்பட்டு, பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளியை, தக்க சமயத்தில் கைது செய்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், வெகுவாக பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended